ஐபிஎல் 2022: நிறைவு விழாவில் பிரதமர் மோடி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் நிறைவு விழா இன்று கோலாகலமாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரின் கவனமும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வருகை மீது திரும்பியுள்ளது.
இந்தப் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
Trending
ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா, நிறைவு விழா ஆகியவற்றில் பணத்தை செலவிட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால் தற்போது நிறைவு விழா நடத்தப்பட காரணம், மத்திய அரசின் 75ஆவது ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான், பிசிசிஐ இந்த நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் தான் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் 2 ஆஸ்கார் விருது வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் மற்றும் ஊர்வசி ரவுதேலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக பாடல்களை அமைக்க எஆர் ரஹ்மான் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
மா துஜே சலாம் மற்றும் குஜராத் கலாச்சாரத்தை போற்றும் வகையுலான பாடல்களும் அரங்கேற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாட உள்ளனர். இந்த நிகழ்ச்சி 6.40 மணிக்கு தொடங்கி சுமார் 40 நிமிடம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில, இந்திய அணி முன்னாள் கேப்டன்களை அழைத்து கவுரவிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவு விழா காரணமாக இன்றைய அட்டம் 7.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு தான் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்பதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now