
ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் முக்கிய அணிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மோதிய போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் காத்துள்ளனர். இதற்கேற்றார் போல இரு அணிகளும் ஆசிய கோப்பையில் 3 முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
லீக் சுற்றில் இரு அணிகளும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோதும், இதன்பின்னர் சூப்பர் 4 சுற்றுக்கு இரு அணிகளும் தகுதிப்பெற்றால் செப்டம்பர் 5ஆம் தேதி மோதுகிறது. இதன் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றால் செப்டம்பர் 11ஆம் தேதி மோதலாம். எனவே இந்த மோதலில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.