
Pooran, Hope to lead West Indies in Pakistan after injury forces Pollard out (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி டி20 தொடர் டிசம்பர் 13இல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22இல் நிறைவுபெறுகிறது.
இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கராச்சியில் நடைபெறுகின்றன. மேலும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார்.