எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக்காக எஸ்ஏ 20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து, வெய்ன் பார்னெல் தலைமயிலா பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர பட்டாளங்கள் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
- இடம் - போலாண்ட் பார்க் மைதானம், பார்ல்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
போலண்ட் பார்க் மைதானம் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த மைதானத்தில் அதிகபடியான பவுன்ஸ் இருக்கும் காரணத்தால் பேட்டர்களுக்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சிறப்பாக பந்துவீசும் வேகப்பந்துவீச்சாளர்களும் இம்மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை சொலுத்தலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 03
- பார்ல் ராயல்ஸ் - 01
- பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - 02
உத்தேச லெவன்
பார்ல் ராயல்ஸ்: டேவிட் மில்லர், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், இவான் ஜோன்ஸ், ஃபேபியன் ஆலன், ஆண்டிலே பெலுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லோர்கன் டக்கர், ஓபேட் மெக்காய், தப்ரைஸ் ஷம்சி, லுங்கே இங்கிடி.
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்: வில் ஜாக்ஸ், பால் ஸ்டிர்லிங், பில் சால்ட், ரைலீ ரூசோவ், கொலின் இங்க்ராம், வெய்ன் பார்னெல், தியூனிஸ் டி ப்ரூயின், ஜிம்மி நீஷம், ஆதில் ரஷித், ஈதன் போஷ், கார்பின் போஷ்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், பில் சால்ட்
- பேட்டர்ஸ்: ரைலீ ரூஸோவ், டேவிட் மில்லர், ஜேசன் ராய்
- ஆல்ரவுண்டர்கள்: ஜிம்மி நீஷம், ஆண்டிலே பெலுக்வாயோ, வில் ஜாக்ஸ்
- பந்துவீச்சாளர்கள்: ஆதில் ரஷித், லுங்கி என்கிடி, வெய்ன் பார்னெல்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now