Advertisement

எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 25, 2025 • 11:37 AM

Paarl Royals vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 25, 2025 • 11:37 AM

இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி, இரண்டு முடிவில்லை என 09 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending

PR vs PC, SA20 2025: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்
இடம் -  போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானம், பார்க்
நேரம் - ஜனவரி 25,  மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

PR vs PC Pitch Report

இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 130 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 173 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PR vs PC: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 06
  • பார்ல் ராயல்ஸ் - 04
  • பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - 02

PR vs PC: Where to Watch?

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PR vs PC: Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ்: டேவிட் மில்லர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மிட்செல் வான் புரன், ரைலீ ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள்: வில் ஜாக்ஸ், ஜோ ரூட், தயான் கலீம்
  • பந்துவீச்சாளர்கள்: முஜீப் உர் ரஹ்மான், ஈதன் போஷ், குவேனா மபாகா

Paarl Royals vs Pretoria Capitals Probable Playing XI

Paarl Royals Probable Playing XI: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், மிட்செல் வான் பியூரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் கலிம், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லாலகே, முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.

Pretoria Capitals Probable Playing XI: வில் ஜாக்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், வில் ஸ்மீத், கைல் வெர்ரெய்ன், ரைலீ ரூஸோவ் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், மார்க்வெஸ் அக்கர்மேன், செனுரான் முத்துசாமி, மிகைல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், தியான் வான் வூரன்

PR vs PC Dream11 Prediction, PR vs PC Dream11 Team, Today Match PR vs PC, SA20 2025, Fantasy Cricket Tips, PR vs PC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Paarl Royals vs Pretoria Capitals

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement