
Pragyan Ojha Wants India To Play Both Jadeja And Ashwin In WTC Final (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு, இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி அஸ்வுன் - ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து விளையாட வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஓஜா,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் - ஜடேஜா இணை நிச்சயம் விளையாட வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவராலும் பேட்டிங் செய்ய முடியும் என்பதால், அது அணிக்கு பெரும் பலமாக அமையும். மேலும் இவர்களது பந்துவீச்சு நிச்சயம் எதிரணிக்கு பெரும் சவாலாக அமையும் என்பதால் இந்த இணை நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.