Advertisement

மகிழ்ச்சியானா நினைவுகளுக்கு நன்றி - கேரி கிறிஸ்டின்

2011ஆம் அண்டு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. உலகக்கோப

Advertisement
Cricket Image for மகிழ்ச்சியானா நினைவுகளுக்கு நன்றி - கேரி கிறிஸ்டின்
Cricket Image for மகிழ்ச்சியானா நினைவுகளுக்கு நன்றி - கேரி கிறிஸ்டின் (Gary Kirsten (Image Source: Google))
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 03, 2021 • 03:17 PM

2011ஆம் அண்டு இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.
உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய அணியின் அப்போதைய
பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ட்வீட செய்துள்ளார். அதில்,

Bharathi Kannan
By Bharathi Kannan
April 03, 2021 • 03:17 PM

கேரி கிறிஸ்டினின் ட்வீட்டர் பதிவில், இந்திய அணி உலகக்கோப்பை வென்று 10 ஆண்டுகள்
ஆகிறது. இது எனது கிரிக்கெட் பயணத்தில் சிறப்பான தருணங்களில் ஒன்று. அந்த நாளிலிருந்து
ஒரு அணியாக எப்படி உயர்ந்துள்ளது என்பதையும், வீரர்கள் எவ்வாறு தங்களை
வளர்த்துக்கொண்டார்கள் என்பதையும் பார்த்து பெருமையடைகிறேன். இந்த இனிமையான
நினைவுகளுக்கு இந்தியவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ள கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Trending

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி
கிறிஸ்டன் 2008 முதல் 2011 வரை பொறுப்பு வகித்தார். இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி
முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றது.
அதேபோல் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்த அணியாக
உருவெடுத்தது.

இளம், அனுபவ வீரர்களோடு அணியை உருவாக்கிய இவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ஆம்
ஆண்டு உலகக்கோப்பையை பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement