
PSL 2021: Bowlers, Hazratullah Zazai Star In Peshawar Zalmi's 6 Wicket Win Over Karachi Kings (Image Source: Google)
அபுதாபில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் அசாம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்டின் கப்தில், வால்டன், நஜிபுல்லா ஸட்ரான் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸால்மி அணி தரப்பில் ரியாஸ், அப்ரர் அஹ்மது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.