
PSL 2021: Full Schedule And Timings (Image Source: Google)
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 9 முதல் ஜூன் 24 வரை இந்த வருட பிஎஸ்எல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.