
PSL 2021: Islamabad have pulled off a sensational victory against Lahore Qalandars (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஒப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - ஆசிப் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இஃப்திகர் அஹ்மத் 49 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிப் அலி அரைசதமடித்து அணிக்கு உதவினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை சேர்த்தது.