
psl-2021-karachi-kings-beat-Quetta-Gladiators-by-14-runs (Image Source: Google)
அபுதாபில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜில் கான் - பாபர் அசாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷர்ஜில் கானும் 45 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இறுதியில் வால்டன் - தானிஸ் அஸிஸ் அபாரமாக விளையாடி அணிக்கு உதவினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்ஜில் கான், தானிஸ் அஸிஸ் தலா 45 ரன்களை சேர்த்தனர்.