பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்துவீச்சில் சுருந்த கிளாடியேட்டர்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்டை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து கிளாடியேட்டர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் உஸ்மான் கான், காமரூன் டெல்போர்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேக் வெதர்லாண்டு அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் வந்த அசாம் கான் தனது பங்கிற்கு 38 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now