Advertisement

பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுல்தான்ஸ்!

இஸ்லாமாபத் யுனைடெட் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Advertisement
PSL 2021: Multan Sultans To Maiden Pakistan Super League Final
PSL 2021: Multan Sultans To Maiden Pakistan Super League Final (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2021 • 10:58 PM

அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் இன்று முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2021 • 10:58 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் சோயிப் மக்சூத் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். 

Trending

இறுதியில் ஜான்சன் சார்லர், குஷ்டில் ஷா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் காலின் முன்ரோ முதல் பந்திலேயே வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த சதாப் கான், இஃப்திகர் அஹ்மத், ஆசிப் அலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

இருப்பினும் மறுமுனையில் போராடிய உஸ்மான் கவாஜா 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால் அந்த அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி, நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement