Advertisement

பிஎஸ்எல் 2021: பாபர் அசாம் அதிரடி வீண்; கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!

பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 10, 2021 • 23:01 PM
PSL 2021: Multan Sultans trash Karachi Kings and won by 12 runs
PSL 2021: Multan Sultans trash Karachi Kings and won by 12 runs (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி, கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணி லிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  
அந்த அணியில் அதிகபட்சமாக ரிலே ரஸ்ஸோ, குஷ்டில் ஷா ஆகியோர் தலா 44 ரன்களைச் சேர்த்தனர். கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Trending


இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளுக்கும் வகையில் ஷர்ஜில் கான், மார்டின் கப்தில், நஜிபுல்லா ஸட்ரான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - சத்விக் வால்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 35 ரன்களில் வால்டன் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி  7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் அசாம் 85 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement