
PSL 2021: Munro, Iftikhar decimate Karachi in high-scoring game (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் அசாம் - நஜிபுல்லா ஸட்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதேசயம் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 81 ரன்களையும், நஜிபுல்லா ஸட்ரான் 71 ரன்களை சேர்த்தனர்.