
PSL 2021: Peshawar Zalmi has managed to post a massive first innings total (Image Source: Google)
பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசனில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணி, பெஸ்வர் ஸால்மி அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்ட கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்து வீசத்தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெஸ்வர் ஸால்மி அணியின் தொடக்க வீரர் ஹைதர் அலி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சொயிப் மாலிக் 2 ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த காம்ரன் அக்மல் - டேவிட் மில்லர் இணை எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.