பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 6ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் அபுதாபி செல்கிறார்கள். மேலும் அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு செல்வதற்காக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
Trending
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அவரால் சக அணி வீரர்களுடன் அபுதாபி பயணிக்க முடியாதென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கிளாடியேட்டர்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா கரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாததால் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அதிரடி வீரர் அஃப்ரிடி காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now