Advertisement

பிஎஸ்எல் 2021: ஷின்வாரி, ஷஸாத் பந்து வீச்சில் தோல்வியைத் தழுவிய கலந்தர்ஸ்!

லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது.

Advertisement
PSL 2021: Quetta Gladiators win by 18 runs and keep their playoff hopes alive
PSL 2021: Quetta Gladiators win by 18 runs and keep their playoff hopes alive (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 16, 2021 • 03:19 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 16, 2021 • 03:19 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி கிளாடியேட்டர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு வெதர்லட், சர்ஃப்ராஸ் அஹ்மது, அசாம் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Trending

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் ஜேம்ஸ் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கலந்தர்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த நடையைக் கட்டினர். இருப்பினும் டிம் டேவிட் சில பவுண்டரிகளை பறக்கவிட்டு அணிக்கு நம்பிக்கையளித்தார். 

பின்னர் அவரும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் தங்களது பணியை செய்யத்தவறினர். இதனால் 18 ஓவர்களிலேயே கலந்தர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. அந்த அணியில் உஸ்மான் ஷின்வாரி, ஷஸாத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement