Advertisement

ஜூன் 9-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடக்கம்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி முதல் அபுதாபியில் நடைபெறுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 03, 2021 • 22:55 PM
PSL 2021 to resume on June 9, final to be played on June 24
PSL 2021 to resume on June 9, final to be played on June 24 (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்னர் கரோனா பரவல் காரணமாக இத்தொடர் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது. 

Trending


இதைத்தொடர்ந்து பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 9 முதல் ஜூன் 24 வரை இந்த வருட பிஎஸ்எல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் இரு ஆட்டங்கள் என ஆறு நாள்களுக்கு நடைபெறவுள்ளன. அபுதாபி நேரப்படி முதல் ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கும். பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதல் ஆட்டமும் அடுத்த ஆட்டம் இரவு 11 மணிக்கும் தொடங்கவுள்ளது.

இரவு 11 மணிக்கு பிஎஸ்எல் ஆட்டம் தொடங்கினால் முழு ஆட்டத்தையும் எப்படிப் பார்த்து முடிப்பது என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அபுதாபியில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் இரு ஆட்டங்கள் உள்ள நாள்களில் முதல் ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 

இதன் காரணமாக 2ஆவது ஆட்டம் பாகிஸ்தான் நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்க வேண்டியுள்ளது. எனினும் ஒரே ஆட்டம் நடைபெறும் நாள்களில் பாகிஸ்தான் நேரப்படி 9 மணிக்கு அந்த ஆட்டம் தொடங்கும் என்றும் பிசிபி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement