
PSL 2022: Fakhar Zaman's fifty helps Lahore Qalandars finishes off 206/5 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஷஃபிக் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க மறுமுனையிலிருந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த காம்ரன் குலாம் தனது பங்கிற்கு 43 ரன்களைச் சேர்த்தார்.