
PSL 2022 Final: Lahore Qalandars finishes off 180/5 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான், அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய ஸிசான் அஸ்ரஃப், காம்ரன் குலாம் ஆகியோரும் வந்தவேகத்திலேயே நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.