
PSL 2022: Islamabad United defeat Quetta Gladiators by 43 runs (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 10 ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி காலின் முன்ரோ, ஆசாம் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 72 ரன்களையும், ஆசாம் கான் 65 ரன்களையும், பால் ஸ்டிர்லிங் 58 ரன்களையும் சேர்த்தனர்.