
PSL 2022: Karachi Kings finishes off 174 runs (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் முலதான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சர்ஜீல் கான் - ஜோ கிளார்க் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் சர்ஜீல் கான் 36 ரன்களிலும், ஜோ கிளார்க் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.