
PSL 2022: Lahore Qalandars ended on 182/4 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - காம்ரன் குலாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஃபகர் ஸமான் அரைசதம் அடித்து அசத்தினார்.