
PSL 2022: Lahore Qalandars postes total on 168/7 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஃபகர் ஸ்மான், பிலிப் சால்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷஃபிக் - காம்ரன் குலாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்தார்.