பிஎஸ்எல் 2022: மசூத், ரிஸ்வான் அதிரடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 76 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் முகமது ரிஸ்வான் - ஷான் மசூத் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 69 ரன்களில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத் 83 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் அந்த அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்திய இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now