
PSL 2022: Peshawar Zalmi beat Quetta Gladiators by five wickets (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அஹ்சன் அலி, வில் ஸ்மீத் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக வில் ஸ்மீத் 97 ரன்களையும், அஹ்சன் அலி 73 ரன்களையும் சேர்த்தனர். பெஷ்வர் ஸால்மி அணி தரப்பில் சமீன் குல், உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.