பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை 158 ரன்னில் கட்டுப்படுத்தியது லாகூர்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

PSL 2022: Peshawar Zalmi finishes off 158/7 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - பெஷ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் சோயிப் மாலிக் அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெஷ்வர் ஸால்மி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் ஃபாவத் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News