
PSL 2022: Peshawar Zalmi finishes off 173/4 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷ்வர் ஸால்மி அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷ்வர் ஸால்மி அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - காம்ரன் அக்மல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் காம்ரன் அக்மல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ஸஸாய் 41 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஹைதர் அலியும் 16 ரன்களோடு நடையைக் கட்டினார்.