
PSL 2022: Quetta Gladiators set a target on 191 for Peshawar Zalmi (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு அஹ்சன் அலி - வில் ஸ்மீத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்து 155 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர்.
அதன்பின் 73 ரன்களில் அஹ்சன் அலி ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஸ்மீத் 97 ரன்காளில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.