
PSL 2022: Shahid Afridi tests positive for COVID-19 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் தொடங்குகிறது. இதில் குவிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அஃப்ரிடி விளையாடுகிறார். இந்த சீசனுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அஃப்ரிடி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார். நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார்.
இதன்மூலம், முதல் பகுதி ஆட்டங்களில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அஃப்ரிடி இதுவரை 50 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.