PSL 2023: ஃபகர் ஸமான் காட்டடி; பெஷாவருக்கு 242 டார்கெட்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று லாகூரில் நடந்துவரும் போட்டியில் லாகூர் கலந்தர்ஸும், பெஷாவர் ஸால்மி அணியும் விளைடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அபார மான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.
Trending
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அப்துல்லா ஷஃபிக் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 75 ரன்களை எடுத்த நிலையில் வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதற்கிடையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 45 பந்துகளில் 10 சிக்சர், 3 பவுண்டரிகள் என 96 ரன்களில் ஆட்டமிழந்து 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் பின்னர் வந்த டேவிஸ் வைஸ் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவித்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 47 ரன்களைச் சேர்த்தார். பெஷாவர் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now