பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹெல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், காலின் முன்ரோ 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அகா சல்மான் - ஷதாப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகா சல்மான் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷதாப் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த ஷதாப் கான் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசி விக்கெட்டை இழந்தனார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோர்டன் காக்ஸ் - அசாம் கான் இணை அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் காக்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும், அசாம் கான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்துள்ளது. பெஷாவர் ஸால்மி அணி தரப்பில் சைம் அயூப் இரண்டு விக்கெட்டுகளையும், லுக் வூட் மற்றும் சல்மான் இர்ஷத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now