பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட்டை 138 ரன்களில் சுருட்டியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்ப லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் 21 ரன்களிலும், காலின் முன்ரோ 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய ஆகா சல்மான் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Trending
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் 2 ரன்களிலும், அஸாம் கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த ஆகா சல்மானுல் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோர்டன் காக்ஸ் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் ஜோர்டன் காக்ஸ் 19 ரன்களுக்கும், ஃபஹீம் அஷ்ரஃப் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் அப்ரார் அஹ்மத், இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now