Advertisement

பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!

லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 28, 2024 • 12:00 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 28, 2024 • 12:00 PM

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹென்றிக்ஸுடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய உஸ்மான் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Trending

இதனையடுத்து களமிறங்கிய தையப் தாஹிரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார். அதேசமயம் மறுபக்கம் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த உஸ்மான் கான் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 96 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 2 பவுண்டரின், 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்து அசத்தியது. லாகூர் அணி தரப்பில் கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 31 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஃபகர் ஸமான் 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய காம்ரன் குலாம் 12 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 17 ரன்களுக்கும், ஷாஹீன் அஃப்ரிடி 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜார்ஜ் லிண்டே, ஜஹாந்தத் கான், சல்மான் ஃபயாஸ், ஸமான் கான் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதனால் லாகூர் கலந்தர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முல்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய உஸாமா மிர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement