
psl-6-multan-sultan-quetta-gladiators-by-8-wickets (Image Source: Google)
அபுதாபில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத், ஜான்சன் சார்லஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 73 ரன்களையும், ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும் சேர்த்தனர்.