Advertisement
Advertisement
Advertisement

PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இஸ்லாமாபாத்!

முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement
PSL 8: Islamabad United beat Multan Sultans by 2 wickets!
PSL 8: Islamabad United beat Multan Sultans by 2 wickets! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2023 • 10:53 AM

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பல்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற  இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2023 • 10:53 AM

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் முகமது ரிஸ்வான் 18 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைலீ ரூஸோவ் 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். 

Trending

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷான் மசூத் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்த டிம் டேவிட்டும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு கெட்டகனவாக அமைந்தார். இதற்கிடையில் 50 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்களை எடுத்திருந்த ஷான் மசூத் விக்கெட்டை இழந்தார். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிம் டேவிட் 20 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். அதன்பின் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழகந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - காலின் முன்ரோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 25 ரன்களில் குர்பாஸ் விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோ 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் சதாப் கான் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இதில் ஷதாப் கான் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, அடுத்து வந்த ஆசிஃப் அலி, முபசிர் கான், முகமது வாசிம் ஜூனியர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபஹிம் அஷ்ரஃப் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்களை விளாசியதோடு அணிக்கும் வெற்றியைத் தேடித்தந்தர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement