
PSL: Faf du Plessis ruled out of remaining tournament (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் போது குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூ பிளெஸிஸ் சக அணி வீரர் மீது மோதி காயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை முடிந்து விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் தனது உடல்நிலை குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.