
PSL: Fakhar Zaman star as Lahore Qalandars to reach 199/4 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய கலந்தர்ஸ் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தும் அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
பின் 41 ரன்னில் ஷஃபிக் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்தார். பின்னர் களமிறங்கிய காம்ரன் குலாமும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்தார்.