
psl-karachi-kings-beat-lahore-qalandars-by-7-runs (Image Source: Google)
அபுதாபியில் நடந்து வரும் பிஎஸ்எல் டி20 தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு பாபர் அசாம், மார்டின் கப்தில் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் பாபர் அசாம் அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 54 ரன்களையும், மார்டின் கப்தில் 43 ரன்களையும் எடுத்தனர்.