
PSL: Lahore Qalandars end Multan Sultans' winning run (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஃபகர் ஸமானின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 60 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஷான் மசூத், முகமது ரிஸ்வான், சாகிக் மக்சூத், ரிலே ரொஸ்ஸோவ், டிம் டேவிட் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.