
PSL: Last-over heartbreak sends Karachi Kings packing (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெடுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதாப் கான் 34 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் ஆசாம் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.