Advertisement

பிஎஸ்எல் 2022: சூப்பர் ஓவரில் பெஷ்வர் ஸால்மி வெற்றி!

பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸ்லாமி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 22, 2022 • 11:48 AM
PSL: Qalandars retain second spot despite Super Over loss to Zalmi
PSL: Qalandars retain second spot despite Super Over loss to Zalmi (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 32 ரன்களைச் சேர்த்தார். 

Trending


இதையடுத்து இலக்கை துரத்திய லாகூர் கலந்தர்ஸ் அணி முகமது ஹபீஸின் அதிரடியான ஆட்டத்தினால் வெற்றியை நோக்கியைச் சென்றது. 

அதன்பின் ஹபீஸ் 49 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களைச் சேர்த்து போட்டியை டிரா செய்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி வெறும் 5 ரன்களை மட்டுமேச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய பெஷ்வர் ஸ்லாமி அணியின் சோயிப் மாலிக் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். 

இதன்மூலம் பெஷ்வர் ஸால்மி அணி சூப்பர் ஓவர் முறையில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement