Advertisement

பிஎஸ்எல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லாகூர் கலந்தர்ஸ்!

இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 26, 2022 • 12:38 PM
PSL: Qalandars win thriller to set up summit clash against Multan Sultans
PSL: Qalandars win thriller to set up summit clash against Multan Sultans (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபிக் 52 ரன்களைச் சேர்த்தார். இஸ்லாமாபாத் அணி தரப்பில் லியாம் டௌசன், முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆசாம் கான் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 19.4 ஓவர்களில் இஸ்லாமாபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement