பிஎஸ்எல் 2022: சதாப் கான் பந்துவீச்சில் வீழ்ந்தது கராச்சி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற் 14ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதாப் கான் 34 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் ஷர்ஜீல் கான், பாபர் ஆசாம், ஐயன் காக்பின், இமாத் வாசிம் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் முகமது நபி அதிரடியாக விளையாடி 47 ரன்களைச் சேர்த்தார். ஆனாலும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
இஸ்லாமாபாத் அணி தரப்பில் கேப்டன் சதாப் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இஸ்லாமாபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தியது.
Win Big, Make Your Cricket Tales Now