
செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்கார்ரகள் மயங்க் அகர்வால், கேஎல்ராகுல் சிறப்பாக விளையாடமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை பரிதாபம்தான்.
கடந்த பல போட்டிகளாகவே இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் படுமோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. மூவருமே சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தபோதிலும் சமீபகாலமாக பெரிய இன்னிங்ஸை யாருமே ஆடவில்லை. கடைசியாக புஜாராக அரைசதம் அடித்தது இங்கிலாந்து தொடரில்தான் நியூஸிலாந்துதொடரிலும் அடிக்கவில்லை. ரஹானே ஏதாவது ஒரு போட்டியில்தான் விளையாடுகிறார். கேப்டன் கோலி சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிறது
ஆக இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி என்பது நடுவரிசை பேட்டிங்தான். தென் ஆப்பிரிக்க அணிதிட்டமிட்டு செயல்பட்டு தொடக்க பேட்ஸ்மேன்களை தூக்கிவிட்டாலே இந்திய அணியின் நடுவரிசைஆட்டம் கண்டுவிடும். ஏனென்றால், நடுவரிசையில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை.