
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரின் ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி-இல் இடம்பிடித்துள்ள சொமர்செட் - சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சொமர்செட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சொமர்செட் அணியில் ஜார்ஜ் தாமஸ், பெர்ட்லெட், ஜேம்ஸ் ராவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த உமீத் - கர்டிஸ் காம்பெர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் சதமடித்து அசத்தினர். அதன்பின் உமீத் 119 ரன்களுக்கும், கர்டிஸ் காம்பெர் 101 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் சொமர்செட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்களைக் குவித்தது.