ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காத சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - டிஒய் பாட்டீஸ், மும்பை
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
முந்தைய 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டிய மயங்க் அகர்வால் கடந்த ஆட்டத்தில் அசத்தி ஃபார்முக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம். பேட்டிங்கில் லியாம் லிவிங்ஸ்டன் நம்பிக்கை அளிக்கிறார். ஜானி பேர்ஸ்டோ இன்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ரபடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சும் மிரட்டலாகவே உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் கட்டுக்கோப்புடன் பந்துவீசுவது அவசியம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சாய்த்தது. முந்தைய 2 ஆட்டங்களில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தாலும், மிடில் ஆர்டரில் கலக்கிய ராகுல் திரிபாதி (71 ரன்கள்), மார்க் ராம் ( 68 ரன்கள் நாட்-அவுட்) ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக் என ஹைதராபாத்தின் பவுலிங் அசுர பலத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 18
- ஹைதராபாத் வெற்றி - 12
- பஞ்சாப் வெற்றி - 6
உத்தேச லெவன்
பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி.நடராஜன்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்டர்ஸ் - ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஷிகர் தவான்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன்
- பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், உம்ரான் மாலிக், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா
Win Big, Make Your Cricket Tales Now