
Quinton de Kock Could Miss Two Test Matches Against India (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது.
இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக், இந்தியாவுக்கு எதிரான ஓரிரு டெஸ்டுகளைத் தவறவிடவுள்ளார்.