
Cricket Image for டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்! (Image Source: Google)
உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஒவ்வொரு போட்டிகள் தொடங்குவதற்கும் முன்பாக, இரு அணி வீரர்களும் முழங்காலிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் டி காக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2ஆவது போட்டிக்கு முன் அவர் அணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அடுத்த போட்டியில் இருந்து டி காக் விளையாடுவார் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.